search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாவோயிஸ்ட் மிரட்டல்"

    மாவோயிஸ்ட் அச்சுறுத்தலால் ஒடிசா மாநிலத்தின் மால்கன்கிரி மாவட்டத்தில் உள்ள 2 வாக்குச்சாவடிகளில் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். #LokSabhaElections2019
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நாடு முழுவதிலும் உள்ள 91 தொகுதிகளில் தொடங்கி பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது. 

    20 மாநிலங்களின் 91 தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மக்கள் முன்னதாகவே வாக்குப்பதிவு மையங்களுக்கு ஆர்வமுடன் வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். 

    அத்துடன் ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய மாநிலங்களின் அனைத்து தொகுதிகளுக்கும் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவும் இன்று நடைபெற்றது.

    இதற்கிடையே, ஒடிசாவில் பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் பங்கேற்கக் கூடாது என மாவோயிஸ்ட்கள் மிரட்டல் விடுத்திருந்தனர். இதனால், மாவோயிஸ்ட்கள் தாக்கம் அதிகமுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    இந்நிலையில், மாவோயிஸ்ட் அச்சுறுத்தலால் ஒடிசா மாநிலத்தின் மால்கன்கிரி மாவட்டத்தில் உள்ள 2 வாக்குச்சாவடிகளில் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக, தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், ஒடிசா மாநிலத்தில் தேர்தலில் வாக்காளர்கள் பங்கேற்கக் கூடாது என மாவோயிஸ்ட்கள் மிரட்டல் விடுத்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. ஆனாலும், மால்கன்கிரி மாவட்டத்தில் உள்ள இரண்டு வாக்குச்சாவடிகளில் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை என தெரிவித்தனர். #LokSabhaElections2019
    தமிழகத்தில் விரைவில் நக்சலைட்டுகள் ராஜ்யம் நடக்கும் என்று போலீசார் முன் மாவோயிஸ்ட்டு காளிதாஸ் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினார். #Maoist

    பெரும்பாறை:

    கொடைக்கானல் மலைப்பகுதியில் நக்சலைட் டுகள் ஆயுதபயிற்சி மேற்கொள்வதாக கிடைத்த தகவலின்பேரில் கடந்த 2008-ம் ஆண்டு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது நவீன்பிரசாத் என்ற மாவோயிஸ்ட்டு சுட்டுக்கொல்லபட்டார். அவருடன் தங்கி இருந்த 7 பேர் தப்பி ஓடினர். பின்னர் பல்வேறு இடங்களில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

    நவீன்பிரசாத்துடன் தங்கி இருந்து 16 வழக்குகளில் தொடர்புடைய பரமக்குடியை சேர்ந்த காளிதாஸ் கேரள சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரை போலீசார் திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காளிதாஸ் தனது கூட்டாளிகளுடன் ஆயுத பயிற்சி மேற்கொண்ட இடங்களை நேரில் அழைத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர். அதன்படி கொடைக்கானல் கீழ்மலை கிராமமான தாண்டிக்குடி, பாச்சலூர், செம்பரம்பாக்கம், கடுகுதடிபுதூர் உள்ளிட்ட இடங்களை காளிதாஸ் போலீசாருக்கு அடையாளம் காட்டினார்.

    இந்த இடங்களில் தாங்கள் பயிற்சி மேற்கொண்டதாக கூறினார். மேலும் போலீசாரிடம் விரைவில் தமிழகத்தில் நக்சலைட்டுகள் ராஜ்யம் நடக்கும். இல்லாவிட்டால் நாங்கள் ஒன்றுகூடுவோம் என்றார். மேலும் ஆட்சிகள் பல மாறினாலும் கொடைக்கானல் மலைக்கு சாலை, குடிநீர், தெருவிளக்கு, மருத்துவமனை போன்ற அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை.

    அதனால் தான் நாங்கள் மலைவாழ் மக்களோடு ஒன்று சேர்ந்து வாழ்ந்து வந்தோம். அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பாடல்களை பாடி புத்துணர்வு பெற வைத்தோம் என்று கூறினார்.

    காளிதாஸ் மலைவாழ் மக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் பாட்டு பாடி கூட்டம் சேர்ப்பதில் வல்லவர். இவர்கள் ஆயுத பயிற்சிக்கு படிப்பறிவு இல்லாத மலைகிராமத்தையே பெரும்பாலும் தேர்வு செய்துள்ளனர்.

    நக்சலைட்டுகள் மீண்டும் ஒன்றுகூடுவோம் என்று காளிதாஸ் கூறி இருப்பதில் இருந்து மேலும் பலர் தமிழகத்தின் பல பகுதிகளில் பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. எனவே இவர்களுடன் தொடர்புடைய நபர்கள் யார்? என்று போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர். #Maoist

    ×